Last Updated : 28 Oct, 2014 12:25 PM

 

Published : 28 Oct 2014 12:25 PM
Last Updated : 28 Oct 2014 12:25 PM

உக்ரைன் நாடாளுமன்ற தேர்தலில் அதிபருக்கு ஆதரவாக மக்கள் வாக்கு

உக்ரைன் நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் பெட்ரோ பொரொஷென் கோவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக் கும் முடிவு மற்றும் கிழக்கு உக்ரை னில் கிளர்ச்சியாளர்களுடன் செய்து கொண்ட உடன்பாடு ஆகியவற்றை மக்கள் அங்கீகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

450 உறுப்பினர்கள் கொண்ட உக்ரைன் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. ரஷிய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியை துறந்த பின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். யானுகோவிச் ஆதரவாளர்களை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியாகவும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு உறுப்பினர்கள் பெரும்பான்மை பெறும் வகையிலும் நாடாளு மன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்னரே இத் தேர்தலை அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ நடத்தினார்.

இத்தேர்தலில் முதற்கட்ட முடிவுகளின் படி பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தலைமையிலான மக்கள் முன்னணி கட்சி 21.7 சதவீத வாக்குகளும் அதிபர் பொரொ ஷென்கோவின் கட்சி 21.6 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச் மற்றும் ரஷிய ஆதரவு கட்சிகள் இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன.

கிழக்கு உக்ரைனுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சி வழங்க வகைசெய்யும் உடன்பாட்டை கிளர்ச்சியாளர்களுடன் அதிபர் பொரொஷென்கோ செய்து கொண்டார். இந்த உடன்பாட்டை நிராகரித்த பழமைவாதிகளும் இத்தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெறவில்லை. அதிபரின் கட்சியை விட பிரதமரின் கட்சி சற்று கூடுதல் வாக்குகளை பெற்று வரும் நிலையில், பிரதமருடன் அதிகாரங்களை அதிபர் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையா ளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் அதிபர் பொரொஷென்கோ நேற்று நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில், “75 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்ற இத்தேர்தலில் நாடு ஐரோப்பிய யூனியன் வழியில் செல்லவும் கிழக்கு உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவந்த எனது அரசியல் நிலைப்பாட்டுக்கும் மக்கள் வலுவான ஆதரவு அளித் துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x