Published : 08 Jul 2016 09:00 PM
Last Updated : 08 Jul 2016 09:00 PM
ஜப்பானில் ஒரு கொத்து திராட்சை பழங்கள் ரூ.7,37,004 ஏலம் எடுக்கப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் பருவகாலம் தொடங்கியதும் முதலில் விளையும் பழங்கள், ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த பழங்களை ஏலம் எடுப்பதன் மூலம் அதிர்ஷ்டம், கவுரவம் கிடைப்பதாக அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதையொட்டி ஆண்டுதோறும் நடக்கும் இந்த ஏலத்தில் குறிப்பாக ரோமன் ரூபி வகையை சேர்ந்த திராட்சையை ஏலத்தில் எடுப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. கொத்தில் உள்ள ஒரு திராட்சையின் எடையே 20 கிராம் வரை இருப்பதாலும், அதன் சர்க்கரை அளவு 18 சதவீதம் வரை இருப்பதாலும் இந்த வகை திராட்சைகளுக்கு அந்நாட்டில் கடும் கிராக்கி நிலவுகிறது.
இதனால் ஆண்டுதோறும் இந்த திராட்சையின் ஏலத் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் முதலில் விளைந்த 30 திராட்சைகள் கொண்ட ஒரு கொத்து ரூ.7,37,004க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திராட்சையை ஏலத்தில் எடுத்த டாகாமாரு கோனிஷி என்பவர் கறும்போது, ‘‘இந்த திராட்சைகள் உண்மையான ரூபி ரோமன் வகையை சேர்ந்த முத்துக்கள். ருசி பார்ப்பதற்காக இந்த திராட்சையை நுகர்வோருக்கு வழங்குவதற்கு முன்பாக எங்களது சூப்பர் மார்கெட் கடையில் பார்வைக்காக வைக்கப் போகிறோம்’’ என்றார்.
இதே போல் முதலில் விளைந்த ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட பழங்களும் நேற்று நடந்த ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டன.
30 திராட்சைகள் கொண்ட ஒரு கொத்து ரூ.7 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பதால், ஒரேயொரு திராட்சையின் விலை சுமார் ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT