Published : 10 Jan 2017 07:24 PM
Last Updated : 10 Jan 2017 07:24 PM
காபூல் நகரில் உள்ள ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடம் அருகே நடத்தப்பட்ட இரட்டைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 23 பேர் பலியாகி, 45 பேர் காயமடைந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று ஆப்கன் உள்துறை அமைச்சகம் அச்சம் தெரிவித்துள்ளது. ஒரு குண்டு வெடிப்பு கார்குண்டாக இருக்கலாம் என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதிக் சிதிக்கி தெரிவித்தார்.
“அவர்கள் நாடாளுமன்ற ஊழியர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று பாதுகாப்புத் துறை கூறுகிறது. இந்தத் தாக்குதலுக்கு ஆப்கன் தாலிபான் பொறுப்பேற்றுள்ளது.
ஆப்கன் முக்கிய புலனாய்வு நிறுவனமான என்.டி.எஸ் ஊழியர்கள் சென்ற மினிபஸ் குண்டுவெடிப்பில் சின்னாபின்னமானதாகவும் சுமார் 70 பேர் பலியாகியுள்ளனர் என்றும் தீவிரவாதிகள் தெரிவித்தனர். ஆனால் இதனை போலீஸ் தரப்பு உறுதி செய்யவில்லை.
சிறிது காலம் அமைதியாக இருந்த காபூலில் அமைதியைக் குலைக்கும் வண்ணம் நெஞ்சை உலுக்கும் இந்த இரட்டை குண்டு வெடிப்புச் சம்பவம் பணியாளர்கள் வீடுகளுக்குத் திரும்பும் நேரத்தில் நெரிசலான பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் உள்ள தாருல் அமான் பகுதியில் முதலில் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது, உடனேயே கார்குண்டும் வெடிக்கச்செய்யப்பட்டதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
உளவுத்துறையான் என்.டி.எஸ். பயன்படுத்தி வரும் வீட்டில் இன்று காலை தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 பேர் பலியாகி 9 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT