Published : 01 Oct 2014 05:19 PM
Last Updated : 01 Oct 2014 05:19 PM
இந்தியா-அமெரிக்கா இடையே ஆன உறவில் புதிய வலுவான, நம்பகமான மற்றும் நீடித்த ஆற்றல் பிறந்துள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஐந்து நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஒபாமாவுடன் இணைந்து முதன்முறையாக ஒரு கூட்டுத் தலையங்கத்தை 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பிரபல ஆங்கில பத்திரிகைக்காக எழுதி உள்ளார்.
அதில் இரு நாட்டுத் தலைவர்களும் கூறியுள்ளதாவது: "இந்தியா-அமெரிக்கா இடையே ஆன உறவில் புதுப்பிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. இரு நாடும் தங்களுக்குள் வகுத்து வைத்துள்ள நம்பிக்கை, லட்சியங்கள் ஆகியனவைக்கு புத்துணர்வூட்டுவதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த செயல்பாடு இரு நாட்டு உறவிலும் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான இந்தியாவின் லட்சிய நோக்கங்களில் அமெரிக்காவும் இணைந்து முனைப்புடன் ஈடுபட உள்ளது இரு நாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
தென் சீன கடற்பகுதி ஓரம் உள்ள அண்டை நாடுகளுக்கு சீனா அளித்து வரும் தொந்தரவு இந்தியாவுக்கு இடையூறாக உள்ளது. சீனா சர்வதேச நாடுகளுடன் கொண்டுள்ள போக்குக்கு அமெரிக்காவுக்கும் அதிருப்தியை தான் ஏற்படுத்துகிறது.
இந்தியா-அமெரிக்கா கொண்டுள்ள இணைவு, வெளியுறவு கொள்கைகளை தாண்டி, மாநில கூட்டாட்சி தத்துவம், ராணுவம், தனியார் துறை, குடிமக்கள் உரிமை என பலதரப்பில் ஒன்றுபட்டுள்ளது.
இந்த உறவு வலுப்பெறும் விதமாக 21-ஆம் நுற்றாண்டில் நாம் இணைந்து செயல்பட பலதரப்பட்ட இரு நாடுகளுக்கு ஒற்றுமையான விஷயங்கள் உள்ளன.
சர்வதேச சகோதரர்களாக, நாம் இருவம் இணைந்து கடல் தாண்டிய வர்த்தகம், உள்நாடு பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை போன்ற பல விவகாரங்களில் நாம் ஒன்றுபட்டு நமது நுண்ணறிவை பகிர்ந்து செயல்படுவோம்" என்று பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா இணைந்து எழுதியுள்ள கூட்டுத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT