Last Updated : 12 Sep, 2016 04:44 PM

 

Published : 12 Sep 2016 04:44 PM
Last Updated : 12 Sep 2016 04:44 PM

அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப், ஹிலாரிக்கு அறிவுரை வழங்கிய மிஸ் அமெரிக்கா

அட்லாண்டிக் நகரில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா 2017 -ல் பட்டம் வென்ற சாவி ஷீல்ட்ஸ்(Savvy Shields) டிரம்ப் மற்றும் ஹிலாரிக்கு வழங்கிய அறிவுரையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அமெரிக்காவில் அட்லாண்டிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை மிஸ் அமெரிக்கா 2017 அழகி போட்டி நடைப்பெற்றது. இதில் 52 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சாவி ஷீல்ட்ஸ் மிஸ் அமெரிக்கா 2017 ஆக தேர்தெடுக்கப்பட்டார்.

ஷீல்ட்ஸ் அர்கன்சாஸ் நகரின் சார்பாக மிஸ் அமெரிக்கா 2017 போட்டியில் கலந்துகொண்ட ஷீல்ட்ஸ் கேள்வி பதில் சுற்றில் அனைவரையும் கவனத்தை பெற்றார். அதுவே அவரின் வெற்றி வாய்ப்புக்கும் காரணமாயிருந்தது.

மகுடம் அணிவிக்கப்பட்ட சாவி ஷீல்ட்ஸ்

அரசியல் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சற்றும் யோசிக்காமல் தனது மனதிலிருந்த கருத்தை தடாலடியாக உடைத்து பார்வையாளர்களின் கைத்தட்டலையும் பெற்றார் ஷீல்ட்ஸ்.

உதாரணத்துக்குஅமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து சாவி ஷீல்ட்ஸிடம் கேட்கப்பட்ட போது ஷீல்ட்ஸ் அளித்த பதில் "ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப்பும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை சிறப்பாக செய்கின்றனர். ஆனால் அவர்கள் எதைப் பற்றி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்துவதை நிறுத்தி விட்டு சமரச மனப்பான்மையோடு செயல்பட வேண்டும். அமெரிக்கா சமரசத்தில் உண்டான நாடு. அதற்கேற்றப் படி இரு அதிபர் வேட்பாளர்களும் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x