Published : 21 Apr 2017 04:46 PM
Last Updated : 21 Apr 2017 04:46 PM
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நிகழும் பஞ்சம் அந்நாட்டின் வரலாற்றில் காணாத பஞ்சமாக மாறியுள்ளது.
சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்தால் சுமார் 2,70,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் குழந்தைகள் நல உலக அமைப்பான யூனிசெஃப் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் சோமாலியாவில் நிகழும் கடும் பஞ்சத்துக்கு இடையே சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று ஏற்பட்டு மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
சோமாலியாவில் ஊட்டச்சத்து இன்மையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்
கடந்த மாதம் சோமாலியாவில் ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 48 மணி நேரத்தில் 110 பேர் பலியானதை தேசிய பேரிடராக அறிவித்தார், சோமாலிய அதிபர் முகமத் அப்துல்லாஹி முகமது.
ஆனால் தொடர்ந்து இரண்டு மாத காலமாக வரலாறு காணாத பஞ்சத்தை தீர்க்க முடியாமல் சோமாலியா அரசு தவித்து வருகிறது.
சோமாலியாவில் நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் சண்டை, மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளது. வறட்சி ஏற்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் சுமார் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இதனிடையே பஞ்சமும் வறட்சியும் தாண்டவமாடும் பகுதிகளில் கடும் சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT