Last Updated : 10 Sep, 2016 02:44 PM

 

Published : 10 Sep 2016 02:44 PM
Last Updated : 10 Sep 2016 02:44 PM

பூமியில் மளமளவென விழுந்து இறந்த குருவிகள்: அமெரிக்க அதிகாரிகள் குழப்பம்

அமெரிக்காவில் பாஸ்டன் நகருக்கு அருகில் வானிலிருந்து நையாண்டிக் குருவி (Grackle) பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிகாரிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாஸ்டன் நகர அதிகாரிகள் கூறும்போது, "கடந்த வியாழனன்று 47 பறவைகள் சாலைகளில் விழுந்து கிடந்ததாக அந்தப் பகுதி வாசிகள் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து பிராணிகள் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தோம். ஆனால் அவர்கள் அங்கு வருவதற்குள் 35 பறவைகள் இறந்தன. மீதமுள்ள பறவைகள் விலங்குகள் பாதுகாப்புக் கூடத்துக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தன" என்றார்.

சமீபத்தில் அந்தப் பகுதியில் இரண்டு பூனைகளும் இறந்துள்ளன. இதனால் விலங்கு மீட்புப் படையினர் அப்பகுதி வாசிகளை தங்களது செல்லப் பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

பறவைகளின் இறப்பு குறித்த காரணத்தை அறிய பறவைகளின் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x