Last Updated : 05 Aug, 2016 05:10 PM

 

Published : 05 Aug 2016 05:10 PM
Last Updated : 05 Aug 2016 05:10 PM

லண்டனில் கருப்பின மக்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் போராட்டம்

கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து லண்டனின் முக்கிய சாலைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா போலீஸ் அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லண்டனின் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போலீஸார்.

இது தொடர்பாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா வீராசாமி பிபிசி செய்தி நிறுவனத்திடம், “அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை லண்டன் உள்ளிட்ட பிற உலக நாடுகள் அறிந்து கொள்வதற்காகவே இப்போராட்டம் நடத்தப்பட்டது” என்றார்.

“உலகம் முழுவதும் கருப்பின மக்கள் இனவாத தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். லண்டனை பொருத்தவரை கருப்பினத்தவர் மீது குற்றவியல் வழக்குகள் அதிகம் பதியப்படுகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கிலே இப்போராட்டம் நடைபெற்றது. மேலும் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி இங்கிலாந்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட மார்க் துக்கனுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது” என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தின் காரணமாக லண்டனில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x