Published : 01 Jun 2017 03:53 PM
Last Updated : 01 Jun 2017 03:53 PM
கிழக்குப் பகுதியில் ஏவுகணை சோதனையில் நாங்களே தலைவன், எங்களது அணுஆயுத சோதனைகளை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியா கூறியுள்ளது.
தொடர் அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தும் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியது.
அந்நாட்டின் மார்ஷல் தீவில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை, கலிஃபோர்னியாவின் வேன்டென்பெர்க் விமானப் படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது. இந்த வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரம் செல்லக்கூடியவை.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை குறித்து வடகொரியாவின் ரோடங் சின்மன் செய்தித்தாளில் வந்துள்ள கட்டுரையில், "கிழக்கு பகுதியில் ஏவுகணை சோதனைகளில் நாங்களே தலைவன். எங்களது அணுஆயுத சோதனைகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வடகொரியா தயராக இருக்கிறது. அதிபர் கிங் ஜோங் உன்னின் ஒப்புதலுக்காகவே காத்திருக்கிறோம். அமெரிக்காவைத் தாக்கும் பலம் படைத்தது வடகொரியா என்று அந்நாடு உணர வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT