Published : 09 Jun 2016 02:07 PM
Last Updated : 09 Jun 2016 02:07 PM
அணு ஆயுதப் பரவல் தடுப்பு, அணுசக்தியை சமூக பயன்பாட்டில் ஈடுபடுத்துவது தொடர்பான அணுசக்தி விநியோக நாடுகள் (என்.எஸ்.ஜி. - நியூக்ளியர் சப்ளையர்ஸ்) குழுவில் நாடுகளில் இந்தியாவை உறுப்பினராக அங்கீகரிக்க மெக்சிகோ ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர நரேந்திர மோடி மெக்சிகோ சென்றுள்ளார்.
என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் 48 நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் தங்களுக்குள் அணு மூலப் பொருட்கள், அணுஉலை தொழில் நுட்பங்களை பரஸ்பரம் விநியோகம் செய்து கொள்கின்றன. இந்த கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஸ்ட்விட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது மெக்சிகோவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
வியன்னாவில் நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஆலோசனைக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள நிலையில் மெக்சிகோவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக மெக்சிகோ அதிபர் என்ரிக் நீட்டோ, "சர்வதேச அளவில் அணு ஆயுதப் பரவல் தடுப்பு குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் என்.எஸ்.ஜி. கூட்டமைப்பில் இடம் கோரியுள்ள இந்தியாவின் விண்ணப்பத்தை மெக்சிகோ ஆதரிக்கிறது" என்றார்.
எதிர்க்கும் பாகிஸ்தான், சீனா:
என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைந்தால் தெற்காசிய பிராந்தியத்தில் ஆயுதப்போட்டி அதிகரிக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
அதேபோல், இந்தியா என்டிபிடி (NTPT) எனப்படும் அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவுக்கு என்.எஸ்.ஜி.யில் இடம் பெற வாய்ப்பளிக்கக் கூடாது என சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எந்தவொரு நாடும் என்.எஸ்.ஜி.யில் உறுப்பு நாடாக விண்ணப்பிக்கலாம். ஆனால் எந்தெந்த நாடுகளை குழுவில் சேர்க்க வேண்டும் என்பது 48 நாடுகள் அளிக்கும் வாக்குகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT