Published : 27 Aug 2016 04:18 PM
Last Updated : 27 Aug 2016 04:18 PM
கடற்கரையில் முஸ்லிம் பெண்களால் அணியப்படும் புர்கினி ஆடைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது பிரான்ஸ் நீதிமன்றம்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது புர்கினி ஆடைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பிரான்ஸின் 30 நகரங்களுக்கு பொருந்தும்.மேலும் புர்கினி ஆடைக்கு எதிரான தடை ”அடிப்படை சுதந்திரத்துக்கு எதிரான வன்முறை" என பிரான்ஸ் நீதிமன்றம் கூறியுள்ளது.
முன்னதாக பிரான்ஸ் நாட்டின் கடற்கரையில் புர்கினி அணிந்து கடலில் இறங்கக் கூடாது என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில்தான் புர்கினி ஆடைக்கு எதிர்ப்பு முதலில் கிளம்பியது. புர்கினி ஆடைகள் கடற்கரைகளை அசுத்தப்படுத்துகின்றன என பிரான்ஸ் அரசு கூறியது.
அதை தொடர்ந்து புர்கினி ஆடைக்கு பிரான்ஸின் பல நகரங்களில் தடை விதிக்கப்பட்டது. புர்கினி ஆடைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி பிரான்ஸில் எதிர்ப்புகள் கிளம்பியது. பெண்களின் ஆடை சுதந்திரத்தில் அரசு தலையிடுகிறது எனவும் குரல்கள் எழுந்தன. இதையடுத்து பிரான்ஸ் நீதிமன்றம் தடையை ரத்து செய்வதாக உத்தரவுவிட்டது.
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை பிரான்ஸின் இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்றதுடன் பொது அறிவுக்கும், பெண்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் இந்தப் பிரச்சனையில் முஸ்லிம்கள் மீது களங்கம் ஏற்படுத்துவதை பிரான்ஸ் கண்டிக்கிறது எனவும், இனி புர்கனி ஆடைகள் மதமற்ற ஆடையாக தொடரும் என்று கூறியுள்ளார்.
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை:
புர்கனி ஆடை விவகாரத்தில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனநாயக அமைப்பு கூறும்போது, “நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை மதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு அளிக்கும் பாகுப்பாட்டையே எதிர்க்கிறோம்” என்று கூறியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாம் மதத்துக்கு எதிராவான நடவடிக்கைகள் அதிகமாகி வருவதை சுட்டிக் காட்டியே ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பிரான்ஸ் மீது புனிதப் போர் தொடருவோம் என அறிவித்தது. அதனை ஒட்டியே ஐ.எஸ் அமைப்புகள் பிரான்ஸ் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸில் புர்கா மற்றும் புர்கினி ஆடைகள் அணிய பிரான்ஸ் அரசாங்கம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT