Published : 13 Nov 2013 09:30 AM
Last Updated : 13 Nov 2013 09:30 AM

எல்லாவற்றிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சாதிக்கிறார்கள் என்கிற மாயை வேண்டாம்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்கிறார்கள் என்கிற மாயை வேண்டாம் என்று அறிவுறுத்தினார் பிஜி முன்னாள் பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மகேந்திர பி. சவுத்ரி.

சிட்னியில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மண்டல மாநாட்டில் முக்கிய உரை ஆற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

வெளிநாடுகளில் ஆங்காங்கே வசிக்கும் இந்தியர்களை ஒரே தன்மை மிக்கவர்களாக கருதி விடமுடியாது. சில துறைகளில் இந்தியர்கள் மிளிர் கிறார்கள், சாதனை படைக்கிறார்கள் என்பதை வைத்து எங்கும் இதே நிலைமை என்கிற மாயை வேண்டாம்.

சிட்டினியில் நடைபெறும் வெளிநாடுவாழ் இந்தியர் மாநாடு நல்லதொரு வாய்ப்பாகும். இந்த பிராந்தியத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை இணைக்க இது உதவும். ஆசிய பசிபிக் பகுதியில் பலம் பொருந்திய நாடாக விளங்கும் இந்தியாவின் அணி சேரா கொள்கை, ஜனநாயக ஆட்சி முறை, சுதந்திரம், மனித மாண்புக்கு முக்கியத்துவம் தரும் அதன் கொள்கை ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

பிஜி மக்கள் தொகை 10 லட்சத் துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கையோ சுமார் 2.5 கோடி. சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் வேலை தேடி இந்தியாவை விட்டு வந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

வர்த்தகம், வணிகம் முதலீடு ஆகி யவை முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை யில் மனித மாண்புகள், கண்ணியம், இந்திய வம்சாவளி நபர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தருவது அவசியம்.

பிஜியில் ஒப்பந்தத் தொழிலாளர்க ளாக வந்தவர்களின் நலன் மீது அதிக ஈடுபாடு காட்டினார் மகாத்மா காந்தி. மனித உரிமைகள் மீது மகாத்மா காந்தி அப்போது காட்டிய ஈடுபாடும், விருப்பமும் இன்றைக்கும் அவசிய மாகும். ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள இந்திய சமூகத்தவர் அங்கீகாரமும் நியாயமும் கேட்டு நடத்திவரும் போராட்டத்துக்கு வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் தார்மிக ஆதரவு தரவேண்டும்.

இந்தியாவை விட்டு வெளியேறி வெளி நாடுகளில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களின் நிலைமை துயரகரமாகவே உள்ளது. . தாம் சென்ற பூமியில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வும் அதனுடன் தங்களை ஐக்கியப் படுத்திக்கொள்ளவும் அவர்கள் போராடுவது வேதனையானது.

மனித உரிமை சார்ந்த இந்த விவகாரங்கள் மீது இந்தியா கவனம் செலுத்துவது அவசியம் என்றார் சவுத்ரி. பிஜி நாட்டு அரசியல்வாதியான சவுத்திரி, பிஜி லேபர் கட்சியைச் சேர்ந்தவர். 1999 மே மாதம் பிரதமர் பதவியேற்ற முதல் இந்திய வம்சாவளி தலைவர் அவர். பதவியேற்ற ஒரு ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடைபெற்று அவரும் அவரது அமைச்சரவை சார்ந்த பெரும்பான்மை உறுப்பினர்களும் பிணைக்கைதிகளாக சிறை வைக்கப்பட்டனர். அதன் பின்னர் சவுத்ரி அரசை அதிபர் கலைத்தார்.

மாநாட்டை வயலார் ரவி தொடங்கி வைத்தார்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் மண்டல மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் பேரி ஓ பாரல் ஆகியோர் குத்து விளக்கேற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 95 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்கள் இங்கு வர்த்தகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் கலாசாரத்தையும் பரப்பி வருகின்றனர் என பாரல் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதரகமும் வெளிநாடுவாழ் இந்தியர் நல அமைச்சகமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.

ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஹாங்காங், பப்புவா நியூ கினி, நியூசிலாந்து, பிஜி மற்றும் பசிபிக் தீவுகள் உள்ளிட்ட பக்கத்து நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x