Last Updated : 24 Sep, 2016 03:38 PM

 

Published : 24 Sep 2016 03:38 PM
Last Updated : 24 Sep 2016 03:38 PM

இராக்கில் தற்கொலைத் தாக்குதல்: படையினர் 11 பேர் பலி

இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியில் தீவிரவாதிகள் மூவர் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 11 பேர் பலியாகினர்.

இது குறித்து அரசாங்க செய்தி தொடர்பாளர் கூறும்போது, "சனிக்கிழமை காலை பாக்தாத்திலுள்ள பாதுகாப்பு படையினரின் சோதனை மையம் அருகே வண்டியில் வந்த மூன்று தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடி குண்டை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்தனர். இதில் 11 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர். 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்" என்றார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ் அமைப்பும் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x