Published : 18 Mar 2014 11:12 AM
Last Updated : 18 Mar 2014 11:12 AM

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகவில்லை: ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு

மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என சிடிபிடிஓ கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வியன்னாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது சிடிபிடிஓ அமைப்பு, அணுஆயுத சோதனைகள் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு.

ஐ.நா. சபையின் ஆதரவோடு இயங்கும் இந்த அமைப்பு, மாயமான மலேசிய விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. இத்தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் செய்திதொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "சிடிபிடிஓ அமைப்பு, சரவ்தேச கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை 3 அல்லது 4 வழிகளில் உறுதிப்படுத்துகிறது. இந்த அமைப்பின் கண்காணிப்பு உபகரணங்கள் அணுஆயுத சோதனையை கண்டறிவதோடு, பெரிய அளவிளான விமான விபத்துகளையும் கண்டறிகிறது. உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த அமைப்பு உயர்தர சென்சார்களை நிறுவியுள்ளது. அணுஆயுதச் சோதனையோ, விமான விபத்தோ, பூகம்போ ஏற்பட்டால் உடனே அதன் தாக்கத்தை சென்சார்கள் பதிவு செய்கின்றன" என்றார்.

மேலும், இந்த மையம் பதிவு செய்துள்ள புள்ளி விபரங்கள் அடிப்படையில் விமானம் எங்கேயாவது மோதியோ, நடுவானில் வெடித்துச் சிதறியோ விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x