Published : 21 Jul 2016 07:24 PM
Last Updated : 21 Jul 2016 07:24 PM
உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 மொழிகளில் இயங்ககூடியது கிக்ஆஸ் டாரண்ட்ஸ் இணையதளம். சமீபத்தில் வெளியான கேப்டன் அமெரிக்கா-சிவில் வார், பைண்டிங் டோரி உட்பட அனைத்து புதிய படங்கள், இசை ஆல்பங்கள் என அனைத்தும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெளியான அன்றே இந்த படங்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் அளவிற்கு செயல்பட்டு வந்துள்ளது. இந்த இணையதளத்தின் மதிப்பு 5.4 கோடி டாலராகும். இணையதளத்தின் விளம்பரங்கள் மூலம் வருமானம் ஆண்டுக்கு 1.25 கோடி டாலரில் இருந்து 2.23 கோடி டாலர் வரை இருந்துள்ளது.
கிகாஸ் இணையதளம் 100 கோடி டாலர் மதிப்புள்ள படங்கள், இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடுவதாக புகார் எழுந்ததை அடுத்து தற்போது இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளத்தின் உரிமையாளர் ஆர்டம் வாலின் என்பவர் தகவல் திருட்டு, பண மோசடி ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கிக்ஆஸ் இணையதளம் பயன்படுத்துவோர்க்கு எளிதாக இருந்துள்ளது. எளிதாக தகவல்களை தேடிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ், இசை ஆல்பங்கள் என அனைத்து தகவல்களும் இந்த இணையதளத்தில் காணப்படுகிறது. தொடர்ச்சியாக பார்க்கும் இணையதளங்களில் கிக்ஆஸ் இணையதளம் 69வது இடத்தில் உள்ளது. தகவல்களை திருடி கிகாஸ் இணையதளத்தில் வெளியிடுவது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சார்ந்த ஆர்டம் வாலின் என்பவர் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT