Last Updated : 26 Jun, 2016 02:32 PM

 

Published : 26 Jun 2016 02:32 PM
Last Updated : 26 Jun 2016 02:32 PM

சீனாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து கோர விபத்து: 30 பேர் பலி

மத்திய சீனாவில் பேருந்து ஒன்று சாலையின் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்ததில் குறைந்தது 30 பேர் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 21 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹியுனான் மாகாணத்தில் 56 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாடு இழந்து சாலையின் தடுப்பு மீது பயங்கரமாக மோதியதில் தீப்பிடித்தது, இதில் 30 பேர் பலியானதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த 21 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

ஆன்லைன் அரசு ஒளிபரப்பு சிசிடிவி பதிவில் பேருந்திலிருந்து கறும்புகை வெளியானதை காண்பித்தது.

பேருந்திலிருந்து ஆயில் கசிந்து தீப்பிடித்திருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

சீனாவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு சுமார் 250,000 பேர் பலியாகி வருகின்றனர். பேருந்து நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதும் விபத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x