Published : 27 Oct 2014 04:35 PM
Last Updated : 27 Oct 2014 04:35 PM
ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் சமந்தா பவர், எபோலாவால் சீரழிந்து வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி புரியாத நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சமந்தா பவர், எபோலா போன்ற கொள்ளை நோய் பரவி வருகிறது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சர்வதேச ஆதரவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்றார்.
கினியாவில் அவர் இது பற்றி கூறும்போது, “அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் பாராட்டும் நாட்டுத் தலைவர்கள் தங்கள் பங்குக்கு எதுவும் செய்யவில்லை. எபோலாவின் மீதான சர்வதேச எதிர்வினை பெரிய அளவுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும், எங்களைப் பாராட்டும் நாடுகளிலிருந்து இன்னமும் டாகடர்கள் வரவில்லை, உதவிகள் வரவில்லை, பண உதவி வரவேயில்லை” என்றார்.
இதுவரை 10,000 பேர் எபோலா வைரஸிற்கு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,922 பேர் பலியாகியுள்ளார்கள்.
இதே பகுதியில் மாலி நாட்டில் கினியாவிலிருந்து வந்த 2 வயது பெண் குழந்தை எபோலாவுக்கு பலியானதை அடுத்து அங்கும் 43 பேர் எபோலாவுக்காக எச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படு ஏழ்மையான, அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை எபோலா வைரஸ் அழித்து வருகிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT