Published : 16 Jun 2017 05:05 PM
Last Updated : 16 Jun 2017 05:05 PM
ஐஎஸ் அமைப்பில் ஆட்களை இணைத்த இந்தியாவைச் சேர்ந்த முகமத் ஷாபி அர்மர் என்ற இளைஞரை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், "சர்வதேச பயங்கரவாத பட்டியலில் முகமத் ஷபி அர்மர், ஒசாமா அகமத் அதர், முகமத் இசா யூசிஃப் சாகர் அல் பினாலி ஆகியோர் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் முகமத் ஷாபி அர்மர் என்ற நபர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். ஐஎஸ்ஸில் அமைப்பில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக ஆட்களை இணைத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒசாமா அகமத் அதர் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த பாரீஸ் தாக்குதல் உட்பட பல தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT