Published : 14 Feb 2017 04:07 PM
Last Updated : 14 Feb 2017 04:07 PM
பாகிஸ்தானில் லாகூர் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். 83 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண தலைமை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "இது திட்டமிட்ட தற்கொலைப் படை தாக்குதல். பஞ்சாப் மாகாண லாகூர் நகரில், திங்கட்கிழமை இரவு குண்டுகளை உடலில் கட்டி வந்த தீவிரவாதி ஒருவர் வெடிக்க செய்தார். இதில் 13 பேர் பலியாகினர். 83 பேர் காயமடைந்தனர். உயிழந்தவர்களில் போலீஸாரும் அடங்குவர்" என்றார்.
இந்தத் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜமாத் உர் அக்ரார் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
மேலும் இந்த இயக்கம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "அரசுக்கு எதிராக எங்களது புரட்சி தொடங்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்து பாகிஸதான் பிரதமர், நவாஸ் ஷெரீப்," தீவிரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானை பலவீனப்படுத்த முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டை தொடரும்" என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT