Published : 02 Dec 2013 12:00 AM
Last Updated : 02 Dec 2013 12:00 AM

பலரது அன்பையும் பெற்ற உலகின் அழகற்ற நாய் இறந்தது

உலகின் அழகற்ற நாய் என்ற பட்டத்தை 2007-ம் ஆண்டு வென்ற எல்வுட் என்று அழைக்கப்பட்ட நாய், அமெரிக்காவில் உயிரிழந்தது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட் (8). சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பி னமான எட்வுட், 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்று பட்டத்தை வென்றது.

அதன் பின் அதன் புகழ், அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. அந்த நாய்க்கு ஏராளமானோர் ரசிகர்களாக மாறி னர்.

எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் வலம் வந்தது. மிகவும் வித்தியாசமாக இருந்த அதன் முகமே பலரையும் ஈர்க்கத் தொடங்கியது.

இந்த உலகில் அழகற்றது என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு உயிரினமும் அதற்குரிய லட்சணங்களுடனும் தனித்தன்மையுடனும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு உதாரணமாக திகழ்ந்தது எல்வுட்.

தனது நாய் எல்வுட்டை மிகவும் நேசித்த அதன் உரிமையாளர் குவிக்லி, ‘எவ்ரி ஒன் லவ்ஸ் எல்வுட்’ என்ற தலைப்பில் குழந்தை களுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

குவிக்லி கூறுகையில், “மிகவும் சிறிய நாயான எல்வுட், தான் வாழ்ந்த குறுகிய காலத்திலேயே பலரின் அபிமானத்தைப் பெற்றுள்ளது. எல்வுட்டை நேரில் பார்க்காதவர்கள் கூட, அதன் மீது அன்பு செலுத்தியது நெகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 28) தேங்ஸ் கிவ்விங் டே (அறுவடைத் திருநாள்) அன்று திடீரென நோய்வாய்ப்பட்டு எல்வுட் உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x