Published : 17 Oct 2014 04:37 PM
Last Updated : 17 Oct 2014 04:37 PM
செப்.27-ஆம் தேதி மத்திய ஜப்பான் பகுதியில் உள்ள எரிமலை திடீர் சீற்றம் கண்டதையடுத்து அணு உலைகளின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீது கேள்வி எழுந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமிப் பேரலையை அடுத்து புகுஷிமா அணு உலையின் பாதுகாப்புப் பிரச்சினைகள் வெட்ட வெளிச்சமான நிலையில், செண்டாயில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பாகவே உள்ளது என்று ஜப்பான் அணு உலை ஒழுங்கமைப்புக் கழகம் தெரிவித்திருந்தது.
மேலும், 30 ஆண்டுகளுக்கு மத்திய ஜப்பான் எரிமலை சீற்றம் இருக்காது என்று அணு உலை ஒழுங்குமுறைக் கழகம் தெரிவித்ததை ஜப்பான் எரிமலை ஆய்வு விஞ்ஞானி ஒருவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
தோஷித்சுகு பியூஜி என்ற எரிமலை ஆய்வு விஞ்ஞானி "செண்டாய் அணு உலைகளைச் சுற்றி இருக்கும் பல எரிமலைகளில் ஒன்று வெடித்துச் சீறினாலே போதும், நாட்டுக்கே பெரும் ஆபத்து ஏற்படும் சூழலில் அணு உலைகள் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? மேலும், எரிமலை சீற்றத்தை ஒருவரும் கணிக்க முடியாது. எரிமலை சீறுமா சிறாதா, அல்லது இத்தனையாண்டுகளுக்குப் பிறகு சீறும் என்றெல்லாம் முன் கூட்டியே கணிக்க சாத்தியமே இல்லை." என்று கடுமையாக சாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT