Published : 06 Jan 2017 02:18 PM
Last Updated : 06 Jan 2017 02:18 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நோக்கங்கள் குறித்த அறிக்கையை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் வியாழக்கிழமை அமெரிக்க புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் ஒப்படைத்தார்.
இதுகுறித்து ஜேம்ஸ் கிளாப்பர் தரப்பில்,"அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள்ளதற்கான ஆதரங்கள் உள்ளன. ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்பதை எங்களால் கூறமுடியவில்லை. ஆனால் ரஷ்யா அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், இது தொடர்பான விரிவான விளக்கத்தை ஜேம்ஸ் கிளப்பர் அளிக்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறும்போது, "ரஷ்யா மீதான புலனாய்வுத் துறையின் விசாரணை வெளிப்படையானது என அமெரிக்க அதிபர் ஒபாமா நம்புகிறார்" என்று கூறினார்
இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை ரஷ்யாவுடன் நட்பு பாராட்டி வரும் அமெரிக்க புதிய அதிபர் ட்ரம்ப்பிடம் இன்று (வெள்ளிக்கிழமை) விளக்கப்படவுள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா சைபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT