Last Updated : 04 Aug, 2016 04:41 PM

 

Published : 04 Aug 2016 04:41 PM
Last Updated : 04 Aug 2016 04:41 PM

துபாய் விமான விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் மரணம்

துபாயில் தரையிரங்கும்போது விபத்துக்குள்ளான எமிரேட்ஸ் விமானத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் காயமடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

“விமானம் விபத்துகுள்ளாகும் போது பயணிகளை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்ட இளம் தீயணைப்பு வீரர் தனது உயிரை இழந்துள்ளார். அவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்” என துபாய் பிரதமர் முகமது பின் ரஷித் அல் மக்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை பகல் 10.19 மணிக்கு, போயிங் 777 விமானம் (இகே521) துபாய் நோக்கி புறப்பட்டது. இதில் 282 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 226 பேர் இந்தியர்கள்.

பகல் 12.45 மணிக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட விமானம், திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, ஓடுதளத்தை மோதியது.

இதைத்தொடர்ந்து, விமானத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து, அதில் இருந்து கரும்புகை வெளி யானபடி இருந்தது. உடனடியாக விமானத்தில் இருந்து அவசரகால வழியின் மூலம் பயணிகள் வேக மாக வெளியேறினர். அனைத்து பயணிகளும், பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து பேருந்து மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை எமிரேட்ஸ் நிறுவனம் உனடியாக அறிவிக்கவில்லை. முதலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்படும் என, எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x