Published : 22 Jan 2014 10:13 AM
Last Updated : 22 Jan 2014 10:13 AM
சிரியாவில் இடைக்கால அரசு அமைக்கும் முடிவை ஆதரிக்க மறுத்ததை அடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானுக்கு விடுத்த அழைப்பை ஐக்கிய நாடுகள் சபை திரும்பப் பெற்றுள்ளது.
ஈரானின் இச் செயல், மிகுந்த அதி்ருப்தி அளித்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி- மூன் தெரிவித்துள்ளார்.
சிரியா உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் (மான்ட்ரெக்ஸ் நகர்) அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாரம் தொடங்கவுள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, ஈரானுக்கும் ஐ.நா. அழைப்பு விடுத்திருந்தது.
சிரியா அதிபர் பசார் அல் அஸாத்துக்கு, ஈரான் பெரும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் சிரியாவில் இடைக்கால அரசு அமைக்கும் தீர்மானம் அமைதிப்பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதன் காரணமாக, ஈரானுக்கு ஐ.நா. விடுத்த அழைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஈரான் அமைதிப் பேச்சு வார்த்தையில் பங்கேற்றால், நாங்கள் புறக்கணிப்போம் என சிரியா எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. மேலும் அமெரிக்காவும், தன் எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், ஈரானுக்கான அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது.
இந்நிலையில், சிரியாவில் இடைக்கால அரசு அமைக்கும் முடிவை ஈரான் ஆதரிக்க மறுத்ததால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கான அழைப்பை ஐ.நா. திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. செய்தித் தொடர் பாளர் மார்ட்டின் நெசிர்கி கூறுகையில், “அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்காது. அடிப்படைப் புரிதல்கள் கொண்ட மற்றநாடுகள் கூட்டத்தில் பங்கேற்கும்” என்றார்.
ஈரானுக்கான ஐ.நா. தூதர் முகமது காஸாய் கூறுகையில், “சிரியாவில் நிலவும் பிரச்னைக்கு, அரசியல் ரீதியான தீர்வுகாண ஈரான் எப்போதும் முயற்சி செய்யும். இருப்பினும், இஸ்லாமியக் குடியரசு நாடான ஈரான், ஜெனீவா-2 மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்காது. ஜெனீவா-1 மாநாட் டின் தீர்மானத்தை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்தால், ஜெனீவா-2 மாநாட் டில் ஈரான் பங்கேற்காது” என்றார் அவர்.
வெற்றி பெறுவது சந்தேகம்
ஈரான் வெளியுறவுத்துறை இணைய மைச்சர் அப்பாஸ் ஆராக்சி இது தொடர்பாகக் கூறுகையில், “இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் உள்ளிட்ட தாக்கம் செலுத்தும் நாடுகள் பங்கேற்காத போது, வெற்றிகரமான தீர்வு கிடைக்காது. ஈரான் பங்கேற்காமல், முழுமையான தீர்வு கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தையில் பங்கேற்று, எங்கள் பங்களிப்பைச் செய்ய நாங்கள் தயார். ஆனால், எவ்வித முன் நிபந்தனை களையும் ஏற்க முடியாது” என்றார்.
இப்பேச்சுவார்த்தையில் ஈரானும் பங் கேற்க வேண்டும் என, சிரியாவின் ஆதரவு நாடான ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
ஈரான் பேச்சுவார்த்தையில் பங்கேற்ப தால், தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்த சிரியாவின் பிரதான எதிர்க்கட்சியான சிரியன் தேசியக் கூட்டமைப்பு, தற்போது பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT