Published : 25 Jan 2014 12:09 PM
Last Updated : 25 Jan 2014 12:09 PM

ஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு

புவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.

ஆர்எக்ஸ்ஜே 1532 பால் வெளி மண்டலத்தில் இந்த கருந்துளை உள்ளது. மிகப்பெரிய அளவுடையதாக இது உள்ளது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் கண்காணிப்பு தொலை நோக்கி மற்றும் இதர தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி இக் கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.

அளப்பரிய வடிவமைப்புகளை இக்கருந்துளை உருவாக்கியுள் ளதுடன், வெப்பவாயுச் சூழலில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாவதிலிருந்தும் பாதுகாத்து வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருந்துளை நமது சூரியனை விட ஆயிரம் லட்சம் கோடி (ஆயிரம் டிரில்லியன்) மடங்கு பிரகாசமானது. இக் கருந்துளையின் மையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான தடயம் எதுவும் கண்டறியப்படவில்லை.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துறை (பிளாக் ஹோல்) என்பது அண்டவெளியின் ஒரு பகுதியாகும். இவை இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம். கருந்துளைகளின் எல்லைக்குள் செல்லும் ஒளி உள்ளிட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தியைக் கொண்டவை. இவற்றின் எல்லைக்குள் இருந்து பார்க்கக் கூடி ஒலி, ஒளி, மின்காந்த அலைகள் கூட வெளியேறாது. ஆகவே, இக்கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.

இக்கருந்துளைகள் நட்சத்திர தோற்றப் பரிமாணத்தின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகின்றன. இவை அதீத நிறையைக் (மாஸ்) கொண்டுள்ளதால், முடி வேயில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளன. கன அளவோ, மேற்பரப்போ இவற்றுக்குக் கிடையாது. அண்டப்பெருவெடிப்புக் காரண மாகவே, பூமி உள்ளிட்ட கிரகங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x