Last Updated : 13 Jan, 2017 01:38 PM

 

Published : 13 Jan 2017 01:38 PM
Last Updated : 13 Jan 2017 01:38 PM

துணை அதிபரை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்திய ஒபாமா

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவில் துணை அதிபர் ஜோ பிடனுக்கு 'சுதந்திர ஜனாதிபதி பதக்கம்' வழங்கி ஒபாமா அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அமெரிக்க அதிபராக 8 ஆண்டுகள் பணியற்றிய ஒபாமாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் வியாழனன்று வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திர ஜனாதிபதி பதக்கத்தை தன்னுடன் கடந்த 8 வருடம் துணை அதிபராக பணியாற்றிய ஜோ பிடனுக்கு அணிவித்து கவுரப்படுத்தினார் ஒபாமா.

இந்த விருதை சற்றும் எதிர்பார்க்காத ஜோ பிடன், விருது பெறும் பெயராக அவரின் பெயரை ஒபாமா அறிவித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

பதக்கத்தை ஜோ பிடனுக்கு அணிவித்து ஒபாமா பேசும்போது, "வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான பணியில் ஜோ பிடன் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். நீங்கள் இந்த நாட்டின் மீது கொண்ட நேசமும், ஆற்றிய பணியும் அடுத்த தலைமுறை வரை தாங்கி நிற்கும்" என்று பேசினார்.

விருது பெற்றது குறித்து ஜோ பிடன் கூறும்போது, "எனது வாழ்நாள் முழுவதும் எனக்கு ஒத்துழைப்பு அளித்த எனது மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த மனிதர் (ஒபாமா) ஒருவரின் சிறப்பான பயணத்தில் நான் ஒருபகுதியாக இருந்திருக்கிறேன். ஒபாமா அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க பல சிறப்பான செயல்களைச் செய்திருக்கிறார்"

இவ்விழாவில் ஜோ பிடனின் குடும்பத்தார் மற்றும் ஒபாமாவின் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x