Published : 21 Dec 2013 10:00 AM
Last Updated : 21 Dec 2013 10:00 AM
பிரிட்டன் தலைநகர் லண்டனில் திரை யரங்க கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 76 பேர் காயமடைந்தனர்.
நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ திரை யரங்கம் 112 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வியாழக்கிழமை இரவு சம்பவம் நிகழ்ந்தபோது சிறுவர்கள், பெரியவர்கள் என 720 பேர் திரையரங்கில் இருந்தனர்.
திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததால், அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பலருக்கு தலை யில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 76 பேருக்கு காயம் ஏற் பட்டுள்ளது. இதில் 7 பேர் மோச மான நிலையில் உள்ளனர். லேசாக காயமடைந்த 51 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கடுமையான மின்னல் தாக்கிய தால் கூரை இடிந்தது என்று சிலர் கூறியுள்ளனர். எனினும் அதிகாரப் பூர்வமாக காரணம் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. கூரை விழு வதற்கு முன்பு, அதன் விரிசல்களில் இருந்து நீர் கசிந்ததாக காயமடைந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதில் சதி வேலை ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT