Published : 21 Jan 2014 11:01 AM
Last Updated : 21 Jan 2014 11:01 AM
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 700 முஸ்லிம்கள் போலி நகரில் உள்ள தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் ராணுவப் புரட்சி ஏற்பட்டதிலிருந்து நாடு முழு வதும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் வெடித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மோதலில் 6 முஸ்லிம் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள பிரான்ஸ் படையினர் கலவரத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கலவரம் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வரு வோருக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில் போலி நகரில் உள்ள தேவாலய நிர்வாகத்தினர் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அங்கு சுமார் 700 முஸ்லிம்கள் தங்கி உள்ளனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவா லயத்திலேயே வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT