Published : 28 Aug 2016 10:59 AM
Last Updated : 28 Aug 2016 10:59 AM
பிரிட்டனின் பிரபல தொழிலதிப ரான ரிச்சர்டு பிரான்சன் (66) சைக்கிளில் சென்றபோது விபத் தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுதொடர்பான புகைப்படங் களை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
விர்ஜின் குழுமத்தின் தலை வரான பிரான்சன், கரீபியன் தீவுகளில் ஒன்றான விர்ஜின் கோர்டா தீவில் உள்ள சாலையில் நேற்று முன்தினம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மேடான பகுதியில் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வடிவது போன்ற புகைப் படங்களை தனது சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, “சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் உயிர் பிழைக்க மாட்டேன் என்று நினைத்துவிட் டேன். எனது கன்னம், முட்டி, தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேளையாக நான் அணிந்திருந்த ஹெல்மெட் என் உயிரைக் காப்பாற்றிவிட்டது. எனது சைக்கிள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT