Published : 29 Jun 2017 02:16 PM
Last Updated : 29 Jun 2017 02:16 PM
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட் முன்னதாகவே விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒல்மெர்ட்டின் வழக்கறிஞர் இன்று (வியாழக்கிழமை) கூறும்போது, "இஸ்ரேல் முன்னாள் பிரதமர் ஓல்மெர்ட் சிறை தண்டனை காலம் முடிவதற்கு முன்னதாக அவரை விடுதலை செய்ய பரோல் கமிட்டி முடிவு செய்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட ஒல்மெர்ட் 27 மாதங்கள் சிறையில் கழித்துள்ளார். பரோல் கமிட்டி எங்களது அனைத்து வாதங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒல்மெர்ட் வரும் ஞாயிறுன்று விடுதலை செய்யப்படவுள்ளார்" என்றார்.
71 வயதான ஒல்மெர்ட் 2006 முதல் 2009வரை இஸ்ரேலின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஒல்மெர்ட் விடுதலையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT