Last Updated : 24 May, 2017 05:41 PM

 

Published : 24 May 2017 05:41 PM
Last Updated : 24 May 2017 05:41 PM

பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் - ஐ.நா.வின் அச்சுறுத்தலை நிராகரித்த வடகொரியா

வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்ற ஐ.நா.வின் அச்சுறுத்தலை அந்நாடு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது.

வடகொரியா ஞாயிற்றுக்கிழமையன்று 'புக்குக்சோங்-2' என்ற ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை 500 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா தனது போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையேல் அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்படும் என்று ஐ.நா. எச்சரித்தது.

இதுகுறித்து வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து கூறும்போது, ''அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவாளர்களின் அறிவிப்புகளை என்னவென்று சொல்வது? வடகொரியா அதன் தற்காப்புக்காக செய்யும் அணுஆயுத ஏவுகணை சோதனைகளில் குற்றம் கண்டு பிடிப்பது கேலிக்குரியது. ஐநாவின் அறிவிப்பை நாங்க முற்றிலுமாக நிராகரிகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x