Published : 13 Sep 2018 12:19 PM
Last Updated : 13 Sep 2018 12:19 PM
கலிபோர்னியாவில் தாறுமாறான கோபத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் தன் மனைவியையும் கொன்று அதைப்பார்த்தவரையும் கொன்று மொத்தம் 5 பேரைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்டில் இந்தப் பரபாரப்புத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் பிஸ்கட், சாக்லேட்டுகள் போல் துப்பாக்கிகள் பெட்டிக் கடையில் விற்கும் நிலைமைகள் இருந்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை வன்முறைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்தக் கொலைபற்றி ஷெரீப் ஒருவர் கூறும்போது, ‘இது குடும்பத் தகராறு மற்றும் வன்முறை சம்பவம்’ என்றார்.
மாலை 5.19-க்கு போலீஸாருக்கு பரபரப்பு அழைப்பு வந்தது. அப்போதே 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டும் உயர் தொழில்நுட்ப துப்பாக்கியை வைத்திருந்தவர் சம்பவ இடத்தை விட்டு மாயமாகியிருந்தார்.
முதலில் ட்ரக்கிங் நிறுவனத்தில் முதலில் ஒருநபரை சுட்டுக் கொன்றுள்ளார், பிறகு தன் மனைவியை சுட்டுக் கொன்றுள்ளார்.. இந்தத் துப்பாக்கிச் சூடுகளைப் பார்த்த மற்றொரு நபரையும் விரட்டியடித்து சுட்டுக் கொன்றார்.
பிறகுத் தப்பிச் சென்று வீடு ஒன்றில் புகுந்து இருவரைச் சுட்டுக் கொன்று பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது அமெரிக்காவின் அன்றாட சகஜமாகி வருகிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியின் உடலில் காமிரா இருந்துள்ளது, ஆனால் இதன் பதிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
உலக மக்கள் தொகையில் 4%தான் அமெரிக்கர்கள் ஆனால் உலகின் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்களில் 40% அமெரிக்கர்களாக இருக்கின்றனர் என்று ஜெனிவா ஆராய்ச்சித்துறை ஒன்று கூறுகிறது.
மொத்தம் சிவிலியன்கள் கையில் இருக்கும் 857 பில்லியன் துப்பாக்கிகளில் அமெரிக்கர்கள் 393 மில்லியன் பேர்களிடம் துப்பாக்கிகள் உள்ளது. மற்ற 25 நாடுகளில் துப்பாக்கி வைத்திருக்கும் சாதாரண குடிமக்களின் மொத்த துப்பாக்கிகள் கூட அமெரிக்க சாதாரண மக்கள் கையில் புழங்கும் துப்பாக்கிகள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது குறைவு என்கிறது ஜெனிவா ஆய்வு.
இந்நிலையில் இந்த தொடர் கொலைகள் பரபரப்பாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT