Published : 19 Sep 2018 10:51 AM
Last Updated : 19 Sep 2018 10:51 AM
சிகரெட் பிடிப்பவர்களுக்கு இன்னொரு எச்சரிக்கை ஆராய்ச்சி மூலம் வெளிவந்துள்ளது. அதாவது சிகரெட் மூலம் ரத்தத்தில் கலக்கும் ரசாயனம் ஒன்று கண்பார்வையை பாதிக்கிறது என்பதே அந்த ஆய்வு.
ரத்தத்தில் ‘காட்மியம்’ என்ற ரசாயனம் அதிக அளவில் இருந்தால் கண்பார்வையில் கோளாறுகள் தோன்றுகிறது என்கிறது புதிய ஆய்வு.
JAMA Ophthalmology-யில் வெளியான ஆய்வுத் தகவலில், குறைந்த வெளிச்சம், பனி மற்றும் மூட்டமான, மங்கலான வெளிச்சத்தில் பார்ப்பது சிரமமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்கான்சின் பல்கலையின் மேடிசன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் முன்னணி ஆசிரியரும் இந்த ஆய்வின் முன்னோடியுமான ஆடம் பால்சன் கூறும்போது, “கண்பார்வையின் நுணுக்கமான சில விஷயங்கள் பாதிக்கப்படும் குறைந்த வெளிச்சத்தில் பூட்டில் சாவியை நுழைப்பது உட்பட பல்வேறு சிறு சிறு கண்பார்வை பிரச்சினைகள் புகைப்பிடிப்பவர்களுக்கு இருந்தால் அதற்குக் காரணம் காட்மியம் என்ற ரசாயனமே. இதனை காண்டாக்ட் லென்ஸ், கண்ணாடி போன்றவை சரி செய்ய முடியாது” என்கிறார்.
சிலருக்கு இருசக்கர வாகனங்களில் சாவியை நுழைப்பது இரவு நேரங்களில் சிரமங்களைக் கொடுக்கலாம், இப்படி சிறுசிறு பிரச்சினைகள் நம் கண்பார்வையை பாதிக்கின்றன, ஆனால் நாம் இவற்றை புறக்காரணிகளுடன் தொடர்பு படுத்தி பெரிது படுத்துவதில்லை.
பால் வில்சன் கூறுவதாவது, சிகரெட் இலைசெறிந்த பச்சைக் காய்கள், ஷெல்ஃபிஷ், ஆகியவையில் காட்மியம் என்ற ரசாயனம் அதிகம். பச்சைக்காய்களில் காட்மியம் அதிகம் இருக்கக் காரணம் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் பயிர்களில் பயன்படுத்துவதுதான், ஆகவே பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தாமல் விளைந்த பச்சைக் காய்கறிகளில் காட்மியம் இவ்வளவு தாக்கம் செலுத்த வாய்ப்பில்லை.
காரீயமும் காட்மியமும் விழித்திரையில் சேர்ந்து விடும். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள் ரசாயனங்கள் கூட நம் விழித்திரையை பாதிக்கலாம் ஆனால் ஆய்வு ரீதியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தினால் காட்மியம் அதிகரிக்கும் என்பது நிறுவப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பது தீயது என்பதற்கு இன்னொரு காரணமும் தற்போது இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது.
காட்மியம் ஒரு நரம்புநச்சு, கண்பார்வை நரம்பமைப்பை அது சேதம் செய்யும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT