Published : 12 Sep 2018 02:03 PM
Last Updated : 12 Sep 2018 02:03 PM
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நாங்கர்ஹர் கவர்னர் அதல்லாஹ் கோகானானி கூறும்போது, ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் கிழக்குப் பகுதி மாகாணமான நாங்கர்ஹரில் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகில் உள்ளூர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுருக்கும்போது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
நாங்கர்ஹர் சுகாதாரத் துறை அமைச்சகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரிக்கு பிறகு ஆப்கனில் நடந்த மோசமான தீவிரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT