Published : 08 Sep 2018 04:42 PM
Last Updated : 08 Sep 2018 04:42 PM
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் நடந்த பேருந்து விபத்தித்தில் 21 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், "இந்தோனேசியாவில் ஜாவா தீவில், சுற்றுலா தளமான சுகபூமி பகுதியில் 37 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டுபாட்டை இழந்த அப்பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அப்பேருந்தில் பயணம் செய்த 21 பேர் பலியாகினர் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து குறித்து போலீஸார் தரப்பில், "பேருந்தின் பிரேக் திடீரென செயல்படாமல் போனதே விபத்துக்கு முக்கிய காரணம். அதுமட்டுமல்லாது அந்த வாகனத்தின் தகுதி சான்றிதழ் 2016 -ம் ஆண்டுடன் முடிவடைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட பாதையில் பேருந்து செல்வதற்கு உகந்ததல்ல என அறிவித்திருந்தும் டிரைவர் பேருந்தை செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இதே பகுதியில் ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT