Published : 12 Sep 2018 04:37 PM
Last Updated : 12 Sep 2018 04:37 PM
உலகின் தலைசிறந்த பொருளாதார மையம் என்ற பெருமையை லண்டன் நகரத்திடம் இருந்து நியூயார்க் பறித்துள்ளது.
உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிறுவனங்கள், வர்த்தக கம்பெனிகள் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தன. உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள லண்டன் வசதியான பகுதியாக இருந்ததால், உலகின் தலை சிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு தங்கள் தலைமையிடத்தை வைதது இருந்தன.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து நாடாளுமன்றம் 2016-ம் ஆண்டு முடிவெடுத்தது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து பிரிந்தது. இதனால் ஒன்றுபட்ட ஐரோப்பிய யூனியனின் பொருளாதார பயன்கள் மற்றும் நாணயத்தின் வலிமையை இங்கிலாந்து இழந்தது.
லண்டனில் இருந்தால் யூரோவில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகும் என்பதால் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளியேறி வருகின்றன. உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.
இதனால், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில், பொருளாதார பலம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை நியூயார்க் பிடித்துள்ளது. லண்டன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்தில் ஹாங்காங், நான்காம் இடத்தில் சிங்கப்பூர் இடம் பிடித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT