Published : 27 Sep 2018 01:13 PM
Last Updated : 27 Sep 2018 01:13 PM
உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ஆய்வாளர்கள் மத்தியில் நீண்ட விவாதம் எழுந்துவந்த நிலையில், மடகாஸ்கரில் வாழ்ந்த 860 கிலோ எடை கொண்ட யானைப் பறவைதான் உலகின் மிகப்பெரியது என்று தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஆய்வாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக நீடித்து வந்த வாதம், ஆய்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பறவையாக கருதப்படும் யானைப் பறவை வரோம்பி டைட்டான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் இந்தப் பறவை வாழ்ந்திருக்கலாம், அங்கு மனிதர்கள் மெல்லக் குடியேறியபின் அந்தப் பறவை அழிவைச் சந்தித்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வரோம்பி டைட்டான் பறவையின் எலும்புகள், முட்டைகள், எச்சங்கள் ஆகியவற்றை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தப் பறவையின் எடை ஏறக்குறைய 860 கிலோ இருந்திருக்கலாம், சராசரியாக 650 கிலோ எடை வரை இருந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதாவது ஒட்டச்சிவிங்கியின் உயரம் வரை இந்தப் பறவை இருந்திருக்கும், ஆனால், பறக்கும் சக்தி இந்தப் பறவைக்கு இருந்திருக்காது. இந்த யானைப் பறவையின் முட்டை, கோழி முட்டையைக் காட்டிலும், 160 மடங்கு பெரிதாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
தற்போது வாழ்ந்து வரும் நெருப்புக் கோழியைக் காட்டிலும் 20 மடங்கு பெரிதாக வரோம்பி டைட்டான் பறவை வாழ்ந்திருக்கலாம். இந்தப் பறவை 19-ம் நாற்றாண்டில் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம்,
இந்த யானைப் பறவை அப்யோர்னிதிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் 15 வகையான பறவைகள் இருந்த நிலையில் அதில் ஒருவகை வரோம்பி டைட்டான். இந்த பறவைக் குடும்பத்தில் மிகவும் பெரிதானது இந்த வரோம்பி டைட்டான் ஆகும். இந்த அப்யோர்னிதிடே வகைக் குடும்ப பறவைகள் மடகாஸ்கர் தீவில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கலாம், இந்தப் பறவை இனம் அழிந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்த ஆய்வுகளை லண்டனில் உள்ள ஜுவாலிஜிக்கல் சொசைட்டியின் பேராசிரியர் ஜேம்ஸ் ஹேன்ஸ்போர்டு மேற்கொண்டார். இந்தப் பறவை குறித்த ஆய்வு அறிக்கை ராயல் சொசைட்டி ஓபன் சையின்ஸ் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இந்த வரோம்பி டைட்டான் பறவை குறித்து ஆய்வாளர் ஜேம்ஸ் ஹேஸ்போர்டு கூறுகையில், ‘‘17-ம் நூற்றாண்டில் இந்தப் பறவை மடகாஸ்கர் தீவில் வாழ்ந்திருக்கலாம். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய பறவை இனம் வரோம்பி டைட்டான் என்பது நாங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இலைகள், காய்கறிகள், சிறு உயிரினங்கள், ஆகியவற்றைத் தின்று இந்த டைட்டான் வாழ்ந்திருக்கிறது.
மனிதர்களின் செயல்பாடுகள், வேட்டையாடுதல் இயற்கை சீற்றங்களால் டைட்டான் பறவை அழிவைச் சந்தித்தது. வரோம்பி டைட்டானின் எச்சம்தான் தற்போதுள்ள நெருப்புக்கோழி, வாத்து’’ இவ்வாறு ஹென்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT