Published : 23 Sep 2018 08:51 AM
Last Updated : 23 Sep 2018 08:51 AM
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (இன்டர் சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ்) தலைமையகத்துக்கு சென்றபோது, அந்த அமைப்பை புகழ்ந்து பேசியுள்ளார். இது யாருக்கும் ஆச்சரியம் தரவில்லை. உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பு ஐஎஸ்ஐ என்றும் பாகிஸ்தானை பாதுகாக்கும் முதல் அரண் என்றும் பாராட்டியிருக்கிறார். இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பாகிஸ்தான் பிரதமர் ஆவதற்கும் ஐஎஸ்ஐயும் ராணுவமும்தான் காரணம். நவாஸ் ஷெரீப் இந்தியாவுடன் சமாதானமாகப் போக நினைத்ததால், இதைப் பிடிக்காத ஐஎஸ்ஐ, இம்ரான் கானை ஆதரித்ததாக கூறுவார்கள்.
பாகிஸ்தானின் ஜனநாயகத்தில் எப்போதுமே ராணுவத்தின் ஆதிக் கம் அதிகமாகவே இருக்கும் என்ற அரசியல் வரலாற்றை இம்ரான் கானும் அறிவார். உலக அளவிலும் இந்திய அளவிலும் ஐஎஸ்ஐயும் ராணுவமும் எந்த அளவுக்கு தீவிர வாதத்தை ஊக்குவித்து வருகின் றன என்பதையும் இம்ரான் அறிவார். பாகிஸ்தானின் அபட்டா பாத்தில் பதுங்கியிருந்த ஒசமா பின் லேடன் அமெரிக்க வீரர் களால் கொல்லப்பட்டார். அவர் அங்கிருந்ததே தங்களுக்குத் தெரி யாது என பாகிஸ்தான் சொன் னதை அமெரிக்க அரசியல்வாதி களில் பலர் நம்பவில்லை. பின் லேடன் தங்கியிருந்த வீடு ஐஎஸ்ஐ கண்காணிப்பில் இருந்ததாகவும் அவருக்கு பாகிஸ்தான் ராணுவ டாக்டர் பல ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வந்ததாகவும் ஒரு தகவல் இருக்கிறது.
பாகிஸ்தான் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டை இம்ரான் கட்டுப்படுத்தத் தொடங்கு வார். தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, மோசமாகிக் கிடக்கும் பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டியது உட்பட பல வேலைகள் பிரதமருக்கு இருக்கிறது. பொரு ளாதார சிக்கலைத் தீர்க்க சர்வதேச நிதியமான ஐஎம்எப்பிடம் உதவி கேட்கலாமா, வேண்டாமா என கடந்த 2 மாதங்களாகவே குழப்பம் இருந்து வருகிறது. 2 மாத இறக்கு மதிக்கு மட்டுமே போதுமான அளவுக்கு மிகவும் குறைவாக 1000 கோடி டாலர் அளவுக்குத்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக் கிறது. ஐஎம்எப்பிடம் 1200 கோடி டாலர் அளவுக்கு பாகிஸ்தான் கடன் கேட்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இது கடந்த 2013-ல் வாங்கிய கடனை விடவும் 2 மடங் காகும். கடந்த 1980 முதல் இதுபோல் ஐஎம்எப் அமைப்பிடம் பாகிஸ்தான் கையேந்துவது 13-வது முறை யாகும். கேட்டவுடன் கடன் கிடைத்து விடாது. பொருளாதார சீர்திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும் என ஐஎம்எப் நிபந்தனை விதிக்கும். ஆனால் அது தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமையை உருவாக்க முடியாது. வர்த்தகப் பற்றாக்குறை 3800 கோடி டாலராக உள்ளது. பொருளாதார நிலைமையும் மோச மாக உள்ளது. இதுபோன்ற சூழலில் விவசாயத்துக்கான மானியத்தைக் குறைப்பதும் மின் கட்டணத்தை அதிகரிப்பதும் நடக்காத காரியம். மேலும் இதுபோன்ற ஐஎம்எப் கடனுதவி, ஒரு நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத் தன்மைக்கும் எந்தவிதத்திலும் உதவாது என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐஎம்எப் உதவியுடனோ அல்லது அது இல்லாமலோ பொருளாதார நிலைமையை சீர்படுத்த வேண்டியது இம்ரானுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். அதைவிட பாகிஸ்தானை தீவிரவாத நாடு என்ற அவப்பெயரில் இருந்து விடுவிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். தீவிரவாதத்தின் மையமாகவும் உலகம் முழுவதும் தேடப்படும் தீவிரவாதிகளின் புகலிடமாகவும் பாகிஸ்தான் இருப்பதாக சர்வதேச அளவில் ஏற்கெனவே கெட்ட பெயர் இருக்கிறது. அதனால்தான், கடந்த ஜனவரி 2-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் செய்தியில், ‘‘கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ் தானுக்கு முட்டாள்தனமாக 3300 கோடி டாலரை உதவியாகக் கொடுத் துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக, பாகிஸ்தான், அமெரிக்க தலைவர்களை முட்டாள்களாகக் கருதி பொய் சொல்லி ஏமாற்றி வந்துள்ளது. நாம் தேடும் தீவிர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக் கிறது" எனக் கூறியிருக்கிறார்.
தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தான் ஒரு தளமாக செயல்பட்டதாகவும் அமெரிக்கா கொடுத்த நிதியெல்லாம் தான் ஏற்கெனவே செலவிட்ட தொகை தான் என்றும் பாகிஸ்தான் கூற லாம். ஆனால் அமெரிக்காவில் இதை நம்ப யாரும் தயாரில்லை. அமெரிக்கா கொடுத்த நிதியை இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் பயன் படுத்தியது பலருக்குத் தெரியும். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், பாகிஸ்தானை அவப் பெயரில் இருந்து மீட்டெடுத்தால் மட்டுமே, இம்ரான் கானால் உண்மையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி பாகிஸ்தானை அழைத்துச் செல்ல முடியும்.
- ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரி பேராசிரியர்
தமிழில்: எஸ். ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT