Published : 04 Sep 2018 11:06 AM
Last Updated : 04 Sep 2018 11:06 AM
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த ஹக்கானி தீவிரவாத குழுவின் தலைவர் ஜலாலுதின் ஹக்கானி இறந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்டுவருகிறது ஹக்கானி தீவிரவாத அமைப்பு. ஆப்கானிஸ்தானில் பல்வேறு வெடி குண்டு சம்பவங்கள், தூதர தாக்குதல்களில் இந்த அமைப்ப்பு ஈடுபட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு மிகுந்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்த ஹக்கானி தீவிரவாத அமைப்பை 1970 ஆம் ஆண்டு நிறுவியவர் ஜலாலுதின். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் ஹக்கானி அமைப்பின் துணை தலைவர் பதவி, அவரது மகனான சிராஜூதீன் ஹக்கானியிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜலாலுதின் உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஜலாலுதீனின் மறைவு ஹக்கானி தீவிரவாத அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT