Last Updated : 17 Jun, 2019 04:32 PM

 

Published : 17 Jun 2019 04:32 PM
Last Updated : 17 Jun 2019 04:32 PM

துருக்கியில் புலம்பெயர்ந்து செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்து: 31 பேர் மீட்பு; 8 பேர் பலி

துருக்கியிலிருந்து வெளிநாடு செல்ல முயன்றபோது படகு கவிழ்ந்ததால் பயணம் செய்த 40 பேரும் கடலில் மூழ்கிய நிலையில் இதில் 8 பேர் உயிரிழந்ததாக துருக்கி கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள்:

துருக்கிய எல்லையருகே உள்ள கிரேக்கத் தீவு ஒன்றின் அருகே இச்சம்பவம் இன்று காலை நடந்தது.

முக்லா மாகாணத்தின் போர்டம் மாவட்ட கடலோரப் பகுதியிலிருந்து மொத்தம் 40 பேர் அடங்கிய படகு ஒன்று இன்று காலை துருக்கியிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடு நோக்கி புறப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமாக கடல்மார்க்கப் பயணத்தை மேற்கொண்டனர். அப்போது திடீரென படகு கவிழ்ந்தது.

தகவல் அறிந்த கடலோரக் காவல்படை, ஹெலிகாப்டர் மூலம் பயணிகளைக் கடலில் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியது. 31 பயணிகள் மீட்கப்பட்டு இரு படகுகளில் கரைக்குக் கொண்டுவரப்பட்டனர். படகில் பயணம் செய்தவர்களில் 8 பேரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் ஒருவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

இன்னும் விசாரணை நடைபெறாத நிலையில் இவர்கள் எந்த நாட்டை நோக்கி படகில் சென்றனர் என்பது தெரியவில்லை என கடலோரக் காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x