Published : 22 Jun 2019 08:10 PM
Last Updated : 22 Jun 2019 08:10 PM
ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல் கட்சியைச் சேர்ந்த பிராந்திய அதிகாரி வால்ட்டர் லியூப்கே என்பவரை புலம்பெயர்வோர்களுக்கு எதிரானவராகக் கருதப்படும் நபர் ஒருவர் ஜூன் 2ம் தேதி தலையில் சுட்டுக் கொன்றதையடுத்து ‘தீவிர வலதுசாரிகளை முடக்க வேண்டிய அவசியம்’ ஏற்பட்டுள்ளது என்று ஏஞ்செலா மெர்கில் தெரிவித்துள்ளார்.
டார்ட்மண்டில் லூதரன் புராடெஸ்டண்ட் கூட்டம் ஒன்றில் பேசிய ஏஞ்செலா மெர்கில் ‘தீவிர வலதுசாரிகளை எந்த விட தடையும் இன்றி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
வால்ட்டர் லியூப்கே (65) என்பவரை தீவிர வலதுசாரி மற்றும் அகதிகளுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ள நபர் ஒருவர் ஜூன் 2ம் தேதி அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு வாரம் முன்பு இந்தக் கொலை தொடர்பாக 45 வயது ஜெர்மன் நபர் ஸ்டீபன் எர்னஸ்ட் என்பவரை போலீஸார் கைது செய்தனர். எர்ன்ஸ்ட் என்பவர் போலீசார் பார்வையில் ஒரு வலதுசாரி தீவிரவாதி, 1980 முதல் 2009 வரை பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன. 1993-ல் அகதிகள் முகாமில் பைப் குண்டு வீசியது உட்பட.
ஜெர்மனி உள்துறை அமைச்சர் ஹர்ஸ்ட் சீஹோபரும் வலதுசாரி குற்றங்கள் ‘ரியல் டேஞ்சர்’ என்று வர்ணித்ததோடு, இது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இவர்களால் யார்யாரெல்லாம் அச்சுறுத்தப்படுகின்றனரோ அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் நாம் நம் கடமையிலிருந்து தவறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
2015-ல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜெர்மனிக்குள் அகதிகள் வரத்து அதிகமானது, உலகிலேயே வெளிப்படையாக அகதிகளை வரவேற்ற முதல் அதிபராக ஏஞ்செலா மெர்கெல் திகந்து வருகிறார், இவருக்கு உறுதுணையாக இருந்தவர் அந்த நபர்தான் கொல்லப்பட்ட லியூப்கே.
தலைமறைவு நாஜி கும்பலும் அங்கு ஆங்காங்கே இயங்கி வருவதையடுத்து ஜெர்மனி இந்த முடிவுக்கு வந்துள்ளது. நியோ-நாஜிகளின் வன்முறைக்கு பலியானோர்களில் பெரும்பாலானோர் அகதிகள் ஆவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT