Published : 07 Jun 2019 07:36 PM
Last Updated : 07 Jun 2019 07:36 PM
கலப்பற்ற ஒரு வகையான பொருளாதார ஈகோயிஸத்தினால் மோதல்கள்தான் வலுக்கும், வர்த்தகப் போர் ஏன் உண்மையான போரே கூட வெடித்துவிடலாம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அமெரிக்க அதிபர் ட்ரம்பை எச்சரித்துள்ளார்.
பொருளாதார மாநாடு ஒன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்றது அதில் புதின் இவ்வாறு தெரிவித்தார். இதே கூட்டத்தில் சீன அதிபர் ஜின்பிங் நியாயமற்ற வர்த்தகப் போட்டி தற்காப்புவாதம் ஆகியவை மேற்கு உலகையும், குறிப்பாக வாஷிங்டனையும் பிடித்து ஆட்டுகிறது என்று புகார் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் குறிப்பாக அமெரிக்காவை விமர்சிக்கும் போது ரஷ்யாவின் ஐரோப்பாவுக்கான நார்த் ஸ்ட்ரீம் பைப்லைன் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கத் திட்டமிடுகிறது என்றும் சீனாவின் தொழில்நுட்ப மிகப்பெரிய நிறுவனமான ஹூவேயை உலகச் சந்தையிலிருந்து வெளியேற்றவும் அமெரிக்கா முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டினார்.
“உலகம் முழுதும் தங்களின் சட்டத் திட்டங்களை செலுத்தி நிலைநாட்ட அமெரிக்கா முயற்சி செய்கிறது” என்றார்.
பொருளாதாரா ஈகோயிஸம் மூலம் பிற நாடுகளை ஆதிக்கம் செலுத்தினால் அது முடிவற்ற மோதல்களுக்கே வழிவகுக்கும். வர்த்தகப் போர்கள், வர்த்தகப் போர்கள் மட்டுமல்ல உண்மையான போரே கூட வெடிக்கலாம். இந்தப் பாதை விதிமுறைகள் அற்ற பாதையாகும். இதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களை எதிரியாகவே பார்ப்பதில்தான் போய் முடியும், என்று ரஷ்ய அதிபர் வேதனை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT