Published : 24 Mar 2018 12:48 PM
Last Updated : 24 Mar 2018 12:48 PM
தென்கொரியாவுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள பேச்சு வரத்தைக்கு வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய அமைச்சகம் சார்பில், "அடுத்த வாரம் நடைபெறவுள் வடகொரியா - தென்கொரியா தொடர்பனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இரு தரப்பிலிருந்து சுமார் 3 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை எங்கு நடைபெறுகிறது, நடைபெறும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வடகொரியாவின் அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. இதை தணிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக தென்கொரியாவில் அண்மையில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. இதன் தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வட கொரியா பங்கேற்றது முதல் தென் கொரியா - வட கொரியா இடையே இணக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT