Published : 01 Mar 2018 01:04 PM
Last Updated : 01 Mar 2018 01:04 PM
எகிப்தில் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து மினா செய்தி நிறுவனம், “எகிப்தின் பெஹிரா மாகாணத்தில் புதன்கிழமையன்று பயணிகள் ரயிலிருந்து இரு பெட்டிகள் தனியாக கழன்று சரக்கு ரயில் மீது மோதியது இதில் பயணிகள் பெட்டியிலிருந்து 15 பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் முழு விவர அறிக்கையை அளிக்குமாறு எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
எகிப்தில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருவதால் ரயில்வே பாதையில் அடிப்படை பாதுகாப்பை மேம்படுத்துமாறு குரல்கள் ஏழத் தொடங்கியுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 40 பேர் பலியாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT