Last Updated : 09 Mar, 2018 02:52 PM

 

Published : 09 Mar 2018 02:52 PM
Last Updated : 09 Mar 2018 02:52 PM

பூமியைத் தாக்க வரும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்?

 சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் - 1 தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா டியாங்கோங் -1 என்ற விண்வெளி நிலையத்தை விண்வெளியில் 2016 ஆம் ஆண்டு அனுப்பியது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு விண்வெளியில் பெரிய அளவில் நிறுவப்பட்ட சீனாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர், டியாங்கோங் -1 தனது வட்டப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், இதனால் அதனை தொடர்புகொள்ள முடியவில்லை என சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதற்கான காரணம் தெரியாமல் சீன விஞ்ஞானிகள் தவித்து வந்த நிலையில் டியாங்கோங் -1 விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 9.5 டன் எடை கொண்ட இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மார்ச் 27 முதல் ஏப்ரல் 8 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நாட்களில் பூமியில் விழலாம் என்றும் வட மற்றும் தென் அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் ஆகிய இடங்களில் விழுவதற்கு வாய்ப்பிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x