Published : 18 Sep 2014 10:51 AM
Last Updated : 18 Sep 2014 10:51 AM
பிலிப்பைன்ஸில் கடந்த பல வாரங்களாக அச்சத்தை ஏற்படுத்தி வந்த மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது.
அதில் இருந்து வெளியேறும் தீக்குழம்புகள் (லாவா) சுமார் 6 கி.மீ. தூரம் வரை பரவும் என்பதால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இப்பணியில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது வரை 8 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேரை ஒரு வாரத்துக்குள் எரிமலை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தப் பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக் கப்பட்டுள்ளது. 2006 இந்த எரிமலை வெடித்தது. ஆனால் அப்போது உயிரிழப்பு ஏற்பட வில்லை. அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசியது. இதில் தொடர்ந்து சீறிக் கொண்டிருந்த தீக் குழம்புகள் பொங்கி சிதறியதில் 1000 பேர் உயிரிழந்தனர்.
மேயான் எரிமலை 2,640 மீட்டர் உயரமுடையது. தலைநகர் மணி லாவில் இருந்து தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை அவ்வப் போது சீறி உயிர்களை பலி கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT