Published : 15 Mar 2018 05:33 PM
Last Updated : 15 Mar 2018 05:33 PM
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியான கிழக்கு கவுட்டாவில் தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் மோசமாகி வருவதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரிய கண்காணிப்புக் குழு கூறும்போது, "சிரிய அரசுப் படை ஹாமவுரியாவில் தொடர்ந்து குண்டுகளை பொழிந்து வருகிறது. புதன்கிழமை நடந்தப்பட்ட தாக்குதலில் சுமார் 26 பேர் பலியாகினர். கவுடாவின் கிழக்கு பகுதியின் பெரும்பான்மையை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன” என்று கூறியுள்ளது.
கடந்த 30 நாட்களாக மட்டும் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை குண்டு வெடிப்பால் மோசமாக பாதிக்கப்பட்ட கப்ரே பாட்னா நகரத்தில் ஊடக ஆர்வலர் அனாஸ் அல் திமாஷிகி கூறும்போது, "அவர்கள் கவுடாவின் நிலத்தை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நிலைமை மோசமாகி வருகிறது"என்றார்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுடா பகுதியை மீட்பதற்காக, அந்நாட்டு அதிபரின் ஆதரவுப் படையினர் கடந்த 18-ம் தேதி முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT