Last Updated : 17 Mar, 2018 01:39 PM

 

Published : 17 Mar 2018 01:39 PM
Last Updated : 17 Mar 2018 01:39 PM

விதி மீறல் புகார்: ட்ரம்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த நிறுவனத்துடன் வர்த்தக உறவை துண்டித்தது பேஸ்புக்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவான பிரச்சாரத்திற்கு விவரங்களை சேகரித்து அளித்த பிரபல கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், விதிமுறைகளை மீறி தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக கூறி அந்நிறுவனத்துடனான வர்த்தக உறவை பேஸ்புக் நிறுவனம் துண்டித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. அதில் வெற்றி டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். தேர்தலின்போது, ட்ரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பிரச்சாரங்கள் நடந்தன.

பேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களில், ட்ரம்ப் குறித்த தகவல்களை பரப்புவதற்காகவும், அவருக்கு ஆதரவான கருத்துக்களை கொண்டு சேர்க்கவும், அனிலிடிக்ஸ் என்பபடும் அரசியல் விவர ஆய்வு நிறுவனங்கள் பணியாற்றின. இந்த நிறுவனங்களுக்கு பெரும் தொகை கொடுத்து ட்ரம்ப் பணியமர்த்தினார்.

இதில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனமும், ட்ரம்புக்காக பணியாற்றியது. இந்த நிறுவனம் டர்ம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சுமார் 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பேஸ்புக் வழியாக தகவல்களை பெறும் அனலிடிகா நிறுவனம் அதனை தவறாக பயன்படுத்தியதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்பை 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் டவுண்லோடு செய்து தகவல்களை பெற்றுள்ளனர். இதன் வழியாக பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை பெற்ற கேம்பிரிட்ஜ் நிறுவனம், விதிமுறைகளுக்கு முரணாக அவற்றை தவறாக பயன்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் கூறுகையில் ‘‘எங்களிடம் இருந்து பெற்ற விவரங்களை அழித்து விட்டதாக கேம்பிரிட்ஜ் நிறுவனம் கூறியது. ஆனால் சொன்னபடி அவற்றை அழித்து விடாமல், சேமித்து தங்கள் சொந்த தேவைக்கும் கேம்பிட்ரிஜ் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். தேவைப்பட்டால் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடருவோம்’’ எனக்கூறினார்.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x