Last Updated : 25 May, 2019 01:04 PM

 

Published : 25 May 2019 01:04 PM
Last Updated : 25 May 2019 01:04 PM

இந்தோனேசியாவின் பாலியில் எரிமலை வெடித்தது: விமானங்கள் ரத்து

தெற்கு இந்தோனேசிய தீவான பாலியில் எரிமலை வெடித்ததால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தோனேசிய தேசிய பேரிடர் முகமை தெரிவித்ததாவது:

நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) ஆகங் எரிமலை வெடித்துச் சிதறியது. வெடிப்பு  4 நிமிடம் 30 விநாடிகளே நிகழ்ந்தது என்றாலும் எரிமலையின் வாயிலிருந்து லாவா எனப்படும் நெருப்புக்குழம்பும் பாறைவெடிப்புச் சிதறல்களும் 3 கி.மீ. தொலைவுக்கு பரவியது. இதன் தடிமனான சாம்பல் மட்டும் 9 கிராமங்களில் சென்று விழுந்தது.

அருகிலுள்ள விமான நிலையத்திற்குள் நெருப்புக்குழம்பின் தடித்த சாம்பல் வந்து விழுந்து பாதைகள் அடைக்கப்பட்டதால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவுக்காவது எரிமலையின் நெருப்புக்குழம்பு பரவினால் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்யவேண்டுமென்பது விதி என்பதால் இந்நிகழ்வின்போது முன்னெச்சரிக்கை தகவல் அளிக்கப்படவில்லை.

அரசின் விமான போக்குவரத்து இயக்குநரகம், பாலி தீவுக்குச் செல்லும் நான்கு விமானங்களையும் வேறு திசையில் மாற்றிவிடப்பட்டுள்ளதாகவும் இங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்திற்கு செல்லும் 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் இதே ஆகங் எரிமலை  கடந்த 1963ல் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மெதுவாக ஒரு அரை நூற்றாண்டிற்கும் மேலாக அமைதியாக இருந்த இந்த எரிமலை சென்ற 2017லிருந்து மீண்டும் கனன்றுகொண்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x