Last Updated : 18 Apr, 2019 02:01 PM

 

Published : 18 Apr 2019 02:01 PM
Last Updated : 18 Apr 2019 02:01 PM

நைஜீரியாவில் பன்னாட்டுப் படையினருடன் மோதிய போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள்: 52 பேர் பலி

வடக்கு நைஜீரியாவில் பன்னாட்டு கூட்டுப் படைகளின் மீது தாக்குதல் நடத்திய 50க்கும் மேலான போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் ஆஸெம் பெர்மான்டோவா தெரிவித்ததாவது:

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து பன்னாட்டு கூட்டுப் படையுடன் நைஜீரிய ராணுவமும் இணைந்து சண்டையிட்டு வருகிறது.

நேற்று நடைபெற்ற சண்டையில், போகோ ஹாரம் படைகளுக்கு எதிராக பன்னாட்டுக் கூட்டுப் படைகளுடன் சாடி, கேமரூன், நைஜர் மற்றும் நைஜீரிய ஆகிய நாடுகளுடன் இணைந்து போரில் ஈடுபட்டன. இப்படையினரின்மீது நேற்று போகோ ஹாரம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டனர். அதனை கூட்டுப்படை முறியடித்து. இதில் 52 போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள் பலியாகினர்.

இதில் 11 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இச்சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதம் ஒன்றும் ஏராளமான சிறிய ரக ஆயுதங்கள் அடங்கிய வாகனம் ஒன்றையும் சாடியன் ராணுவம் பறிமுதல் செய்தது.

இவ்வாறு ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக வடகிழக்கு நைஜீரியாவின் மையப்பகுதியில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் போகோ ஹாரம் தீவிரவாதிகளின் கிளர்ச்சி நைஜீரியாவைத் தாண்டி சாடு, மற்றும் கேமரூன் ஆகியநாடுகளுக்கும் பரவியது.

இச்சண்டையில் இதுவரை 27 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 1.8 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தின் பின்பகுதியில் 500 சாடியன் ராணுவ வீரர்கள் நைஜீரியாவுக்குள் நுழைந்து நைஜீரிய ராணுவத்திற்கு உதவியாக ஜிகாதிகளுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிறு அன்று போகோ ஹாரம் சாடு நாட்டுக்குள் நுழைந்தது. அங்கு பவுஹாமா நகரத்தில் நடத்திய தாக்குதலில் ஏழு சாடியன் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x